தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 5ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த வாக்குமூலத்தின் மூலம் மேலும் மூன்று பேர் கைதாகி கோபிசெட்டிபாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று (ஜன. 27) மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணை தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.