தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பொள்ளாச்சி தனி மாவட்டம்’ - வாக்களித்த பின் திமுக வேட்பாளர் உறுதி! - பொள்ளாச்சி தொகுதி

கோவை: திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்களித்த பின் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர். வரதராஜன் கூறியுள்ளார்.

pollachi
pollachi

By

Published : Apr 6, 2021, 4:16 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வரதராஜன், கோட்டாம்பட்டியில் உள்ள எல்.எம்.எஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொள்ளாச்சியில் பொதுமக்களிடையே திமுகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் வெற்றி உறுதி. திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் தனது சொந்த ஊரான ஆலாம்பாளையத்திலும், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நேதாஜி ரோடு அரசு மகளிர் பள்ளியிலும், நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் நாகராஜ் குள்ளக்காபாளையம் அரசுப் பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

’பொள்ளாச்சி தனி மாவட்டம்’ - வாக்களித்த பின் திமுக வேட்பாளர் உறுதி!

இதையும் படிங்க: மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் : பொள்ளாச்சி ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details