தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சியில் காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்! - Pollachi latest news

பொள்ளாச்சியில் அனைத்து காவலர்களின் குடும்பங்கள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார்கள்.

பொள்ளாச்சியில் சமத்துவ பொங்கல்  சமத்துவ பொங்கல்  காவலர்கள் சமத்துவ பொங்கல்  கோயம்புத்தூர் மாவட்டச் செய்திகள்  பொள்ளாச்சி செய்திகள்  Samathuva Pongal  pollachi police families celebrated Samathuva Pongal  Covai latest news  Pollachi latest news  பொங்கல்
பொள்ளாச்சியில் சமத்துவ பொங்கல் சமத்துவ பொங்கல் காவலர்கள் சமத்துவ பொங்கல் கோயம்புத்தூர் மாவட்டச் செய்திகள் பொள்ளாச்சி செய்திகள் Samathuva Pongal pollachi police families celebrated Samathuva Pongal Covai latest news Pollachi latest news பொங்கல்

By

Published : Jan 17, 2021, 3:56 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அனைத்து காவலர்கள் குடும்பத்துடன் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடினர்.

தமிழ்நாடு காவல்துறை கோயம்புத்தூர் பொள்ளாச்சி உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர் குடும்பங்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட், லெமன்ஸ்பூன், கபடி, வாலிபால், கையிறு இழுக்கும் போட்டி, சோர் விலையாட்டு, சாக்கு போட்டி, ஒட்ட பந்தயம் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஜஜிநரேந்திரா நாயர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா அருள்ராசு ஆகியோர் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்வில், துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவக்குமார், ஆய்வாளர்கள் வைரம் விஜயன், வெற்றிவேலவன், முரளி, நிர்மலாதேவி , உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரா பிரசாத், சரவணன், கதிர்வேல், ராஜேஷ் கண்ணா மற்றும்காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிழ்ச்சியை தனிபிரிவு உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயராஜ் தொகுத்து வழங்கினர்.

இதையும் படிங்க: 'திராவிடக் கட்சிகள் பெண்களுக்கு மரியாதை தருவதில்லை': காயத்ரி ரகுராம்

ABOUT THE AUTHOR

...view details