தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆனைமலையாறு திட்டக் குழு அமைப்பு வரவேற்கத்தக்கது - ஈ.ஆர். ஈஸ்வரன் - ஆனைமலையாறு நல்லாறு திட்டம்

கோவை: ஆனைமலையாறு நல்லாறு திட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு குழு அமைந்திருப்பதால் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என நம்பிக்கை எழுந்துள்ளதாக பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டியளித்தார்.

eeswaran meeting

By

Published : Oct 21, 2019, 10:41 AM IST

பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் சந்தித்து இரு மாநில நீர் பிரச்னை குறித்து பேசும்போது குழு அமைப்பதாக தெரிவித்தனர். அதன்படி ஆனைமலையாறு நல்லாறு திட்டம், பாண்டியாறு திட்டத்தைப் புதுப்பிக்க இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கொண்ட குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்று கூறினார்.

இதன்மூலம் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என நம்பிக்கை எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் பல்வேறு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது சிரமமாக இருப்பதால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்!

ABOUT THE AUTHOR

...view details