தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் - coimbatorer

பொள்ளாச்சி: :பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஜேசிபி இயந்திரம் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

ஜேசிபி உரிமையாளர்கள் போராட்டம்
ஜேசிபி உரிமையாளர்கள் போராட்டம்

By

Published : Feb 24, 2021, 6:41 AM IST

பொள்ளாச்சி, ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஜேசிபி இயந்திரம் உரிமையாளர்கள் தொடர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜேசிபி உரிமையாளர்கள் போராட்டம்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் செய்ததால் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, மத்திய-மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

பொள்ளாச்சி நெகமம் புரவிபாளையம் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் உரிமையாளர்கள், "தொடர் மூன்று நாள் ஜேசிபி இயக்கவில்லை. வாகன இன்சூரன்ஸ், உதிரிபாகம், வாகன விலை ஏற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம்.

இந்தத் தொழிலை நம்பியுள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகள் மக்களின் நலன்கருதி பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெற வேண்டும்" என அரசுக்கு கோரிக்கைவைத்தனர்.

இதையும் படிங்க:”புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - அரசு ஊழியர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details