கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை புறநகர் மாவட்ட பாசறை செயலாளர் சாந்தலிங்கம் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை- பொள்ளாச்சி ஜெயராமன் - Pollachi Jayaraman speech
கோவை: "அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்" எனப் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "பொள்ளாச்சி தொகுதி முழுவதும் உள்ள 269 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 25 பேர் வீதம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக வீடு வீடாகச் சென்று தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.
தற்போது இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ள உறுப்பினர்கள் வரும் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும். அமைச்சராகவும். ஏன் முதலமைச்சராக கூட வாய்ப்புகள் உள்ளன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக பாசறையில் உள்ள உறுப்பினர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.