பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
'பாஜக கேட்டால் மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்குபெறும்' - பொள்ளாச்சி ஜெயராமன் - parliament
கோவை: மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கு பெற பாஜக விரும்பி கேட்டால், முதலமைச்சர், துணை முதலமைச்சரும் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று தமிழ்நாடு துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி ஜெயராமன்
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "அமைச்சரவையில் அதிமுக பங்கு பெற பாஜக விருப்பம் தெரிவித்து அழைத்தால் அதை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்வார்கள். ஜெயலலிதா இல்லாமல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று மக்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவில்லை. பின்தங்கிதான் உள்ளோம்" என்று தெரிவித்தார்.