பொள்ளாச்சி, சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய நிலையில், பொதுமக்களும், விவசாயிகளும் வெயிலின் தாக்கத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பொள்ளாச்சியில் கனமழை: மக்கள் குதூகலம்! - pollachi wether
கோவை: பொள்ளாச்சியில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று திடீரென்று பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கனமழை
அம்பராம்பாளையம் ஆறுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில், மழை இல்லாததால் பாறைகள் மட்டும் கண்களுக்கு தென்படும் அளவிற்கு வெயில் இருந்தது வந்தது. மேலும் ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர் இன்மையால் வரண்ட நிலையில் காணப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடீநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் கனமழை மக்கள் குதூகலம்!
இந்நிலையில், நேற்று சூரைக்காற்றுடன் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.