கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு ஜமீன்ஊத்துக்குளி தனியார் பள்ளியில், வன விலங்குகள் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு ஓவிய, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இது குறித்து அந்த மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து கூறும் போது, "ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் வெற்றி பெறும் மாணவியர்களுக்கு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டாப்சிலிப்பில் உள்ள பழங்குடியின மக்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.