கோவை:நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியைச்சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58), கூலித்தொழிலாளி. இருவரும் நேற்று(செப்.05) முன்தினம் நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது இருவரும் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து விசாரணையில் பலியான மனோகரன் அவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றை விற்று கையில் பணம் வைத்துள்ளார். தோட்டம் விற்ற பணத்தை கொண்டு நண்பர்களுடன் மது குடித்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் மனோகரனின் மகள் மாசிலாமணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது மாமனாரான மனோகரன் குடித்து கும்மாளமிடுவது சத்தியராஜ்-க்கு பிடிக்கவில்லை. மனோகரன் தனது மருமகன் என்ற உரிமையில் சத்தியராஜிடம் மது வாங்கி குடித்துள்ளார்.