கோவை:பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய மணியரசு என்பவர், இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க உள்ளநிலையில் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பருத்தியூரைச்சேர்ந்த மணியரசு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கோமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்துவந்த இவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, வருகிற செப்.1ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. இந்நிலையில், இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளையொட்டி வீட்டிற்கு சென்று அங்கே குடும்பத்தாரிடம், 'தனக்குத் தற்போது திருமணம் வேண்டாம்' என்று கூறிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், மீண்டும் வழக்கம்போல காவல்நிலைய பணிக்குத் திரும்பிய மணியரசு இன்று (ஆக.11) நீண்ட நேரமாகியும் அறையை திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்ததில் அவரது தாயாரின் சேலையில் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச்சென்ற கோமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில், தங்களுடன் பணி புரிந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் தற்கொலை செய்து கொண்ட குடியிருப்பு இதையும் படிங்க: தென்காசியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி