தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ள நோட்டுகள் புழக்கம்: ரூ. 11 லட்சம் பறிமுதல்; போலீஸ் அதிரடி! - coimbatore latest news

கோயம்புத்தூர்: கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்றவர்களை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கள்ள நோட்டுகள்

By

Published : Oct 13, 2019, 6:30 PM IST

கோவை காந்தி பார்க் பகுதியில்,நேற்று மாலை கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற பூபதி, பிரவின்குமார் ஆகிய இருவரை மக்கள் பிடித்தனர். பின் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளது.

தமிழர்களின் கலாசாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள் - மாணவ, மாணவிகள் பெருமிதம்

இவர்களிடம் நடத்திய விசாரணையில் தன்ராஜ், ரஞ்சித் ஆகிய மேலும்இருவர் பிடிபட்டனர். இதில் தன்ராஜ் என்பவர், கள்ள நோட்டுகளை அச்சடித்ததும், ரஞ்சித் என்பவர் அதை பூபதி, பிரவீன் ஆகிய இருவருக்கும் அளித்து, கோவையில் உள்ள பெட்டிக்கடைகள், பூ விற்பவர்கள் போன்ற வியாபாரிகளிடம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டவர்கள் கைது

ஏற்கனவே, தன்ராஜ் 2018ஆம் ஆண்டு, ஸ்ரீவல்லிப்புத்தூரில் கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்படவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details