கோயம்புத்தூர்: பொள்ளாச்சி-பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பியோடியவர்களை காவல் துறையினர் துரத்திப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். நேற்று (நவம்பர் 16) இவரிடம் சிலர் மிரட்டி மூன்று பவுன் தங்க செயின், மாருதி காரை வழிப்பறி செய்து தப்பியுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு வழிப்பறியில் ஈடுபட்ட சிலர் தப்பிச் செல்வதாகத் தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.