தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய காவலர்கள்! - கோவை செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் கொண்டாடிய காவலர்கள்
பொங்கல் கொண்டாடிய காவலர்கள்

By

Published : Jan 14, 2022, 5:02 PM IST

பொங்கல் விழாவையொட்டி, அன்னூர் காவல்நிலையத்தில் காவலர்கள் புத்தாடை உடுத்தி பொங்கலைக் கொண்டாடினார்கள்.

மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர், பாரம்பரிய முறைப்படி ஒரே மாதிரியான வேட்டி, சட்டை அணிந்தும் பெண் காவலர்களும் ஒரே மாதிரியான சேலை அணிந்தும் வந்தனர்.

காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

பின்னர், காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதுப் பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய மிக்க நாட்டு மாட்டு வண்டியைத் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் ஓட்டினார். பின்னர், காவல் ஆய்வாளர் நித்தியா மற்றும் காவலர்கள் அதில் பயணம் செய்து பொங்கலைக் கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த பொது மக்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது

புத்தாடை அணிந்து பொங்கல் கொண்டாடிய காவல்துறையினர்
இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு

ABOUT THE AUTHOR

...view details