கோயம்புத்தூரின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம், வெள்ளியங்கிரிமலை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேராளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம்.
அவ்வாறு வரும் வாகன ஓட்டிகளிடம் அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும் காருண்யா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாறன் என்பவர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகக் குற்றசாட்டு எழுந்தது.
மேலும் கேரளாவிலிருந்து இருசக்கர வாகனங்களில் கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்திற்கு வந்த ஏழு இளைஞர்களிடம் உதவி ஆய்வாளர் மாறன் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும் ஆளுக்கு நூறு ரூபாய் கேட்கும் காட்சி அந்த வீடியோவில் பதவியாகியுள்ளது. ’சுற்றுலா வரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், நாங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?’ என கேட்பது சமூக வளைதலவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் வரும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘பேசாம ஓய்வு அறிவிச்சுட்டு ஃபாரின் போலாமா? யோசனையில் ஹர்பஜன்