கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தர்மராஜ் (36) என்பவர் பெரிய ஆர்டர்களை எடுத்து கார்பெண்டராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள தனியார் நகை அடகுக் கடையில், தனது 11 சவரன் தங்க நகைகளை அடைமானம் வைத்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்.
அதன்பின் வெங்கட்ராமபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று, அங்குள்ள அலமாரியில் தனது பணத்தை வைத்துவிட்டு, வெளியே சென்றவர் கதவை மூடவில்லை என்பதால், மீண்டும் தளத்திற்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, மறுநாள் நவம்பர் 17ஆம் தேதி காலை வீட்டிற்குத் திரும்பிய தர்மராஜ் அலமாரியை வந்து பார்க்கும்போது அங்கிருந்த பணம் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தச் சூழலில் தர்மராஜின் வீட்டில் பணியாற்றும் ராஜ் (33), அவருடன் வேலை செய்யும் மற்றொரு நபரையும் காணவில்லை என்பது தெரியவந்தது.