பொள்ளாச்சி:சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணி, இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் நண்பர்களாகப் பழகி உள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் இருவரும் பிரிந்துள்ளனர்.
அதன்பின் காவலர் நேசமணி, பெண்ணிடம் பழகியபோது எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.