தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் மனு! - PMK Petition to kovai Commissioner

கோவை: பண மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மனு!
மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மனு!

By

Published : Nov 29, 2019, 5:28 PM IST


கோவை மாநகர காவல்ஆணையரிடம் பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமக இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி ஆதாரங்களுடன் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஏற்கனவே இது குறித்து காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் தற்போது மீண்டும் ஆதாரங்களுடன் மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

காவல் ஆணையரிடம் மனுக்கொடுக்க வந்த அசோக் ஸ்ரீநிதி

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கோவையை தலைமையிடமாக கொண்டு பல நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றனர். இதில் ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் என செயல்பட்டு பலரும் சுமார் 200 கோடிக்கும் மேல் பண மோசடி செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை மனவில் இணைத்துள்ளேன்.

இனிமேலாவது மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்கின்ற நிறுவனங்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:

பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details