தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி... கோவையில் சோதனை தீவிரம் - பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் சோதனை
பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் சோதனை

By

Published : Sep 24, 2022, 11:31 AM IST

கோவை நகர் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் ஏழு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார். இந்நிலையில் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் இரவு நேரத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை, கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் வருபவர்களை நிறுத்தி பெயர்கள், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் சோதனை

குனியமுத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குனியமுத்தூர் இடையார்பாளையம் சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் பரத். பாஜகவை சேர்ந்த இவர் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 11.30 மணி அளவில் அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு காரின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உப அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழ்நாடு- கேரள பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் சோதனை

நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர். சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது குடும்பத்தினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அடுத்தடுத்த சம்பவங்கள் குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குள் நடைபெற்றதால் காவல்துறையினர் அனைத்து சாலைகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் சோதனை

கோவை சாய்பாபா கோவில் சன் ரைஸ் பர்னிச்சர் காம்ப்ளக்ஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பழைய சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தது. இரு சக்கர வாகனம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், காவல்துறையினர் வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இது விபத்தா அல்லது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு - கோவையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details