தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கால்வாய்களைத் தூர்வாரக்கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

கால்வாய்களைத் தூர்வாரக்கோரி, கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கால்வாய்களை தூர்வாரக்கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
கால்வாய்களை தூர்வாரக்கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

By

Published : Aug 2, 2021, 8:53 PM IST

Updated : Aug 2, 2021, 9:11 PM IST

கோவை: கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் சார் ஆட்சியரிடம் கால்வாய்களை தூர்வாரக்கோரி, சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, "திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

திருமூர்த்தி அணை

கால்வாய்கள் தூர்வாரக்கோரி..

இதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள 97 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு இந்த நீர் பயன்படுத்தப்படும். பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீர் செல்லும் அனைத்துக் கால்வாய்களும் பழுது அடைந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய்கள் தூர்வாரப்படாமல் நீர் திறக்கும்போது, கடைமடை வரை நீர் செல்வதில்லை.

பாஜக விவசாய அணி சார்பில் சார் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு அரசு உடனடியாக நிதி ஒதுக்கி கால்வாயைத் தூர்வாரி கடைமடை வரை நீர் செல்ல வழிவகை செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் அளித்த மனுவில், "ஆழியார் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கும்பொழுது புதிய, பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்வாய்களை தூர்வார வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: 'திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!'

Last Updated : Aug 2, 2021, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details