கோயம்புத்தூர்: சென்னயைச்சேர்ந்த இளம்மாணவி ஒருவர் சினிமா துறையில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு கோவை நவகரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பொழுது, ’டிஎன் 41’ என்ற ஃபேஸ்புக் மூலம் பார்த்திபன் எனும் நபர் வெளியிட்ட நேர்காணல் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
அதன் பின் 19.12.2019அன்று பொள்ளாச்சி ராமகிருஷ்ணன் மேன்சனிற்கு வந்து பார்த்திபனுடன் அறிமுகம் ஆகி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு, மாணவியை தேர்வு செய்ததாகக்கூறி மூன்று நாட்கள் மாணவியிடம் பேசி வந்துள்ளார்.
பின்னர் மாணவிக்கு பார்த்திபன் மயக்க மருந்து கொடுத்து உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், மயக்கம் தெளிந்த பின்பு மாணவி பிரச்னை செய்தபொழுது பார்த்திபன் 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாககூறியும் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது.