கோயம்புத்தூர்:44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னையில் துவங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி உள்ளது. இப்போட்டியில் 188 நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதை அடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவை கொண்டாட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யுஎம்டி ராஜா 500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின்களை செதுக்கி வடிவமைத்துள்ள விழிப்புணர்வு சிற்பம், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,