தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெரியார் சிலை அவமதிப்பு - கோவையில் பரபரப்பு - பெரியார் சிலைக்கு செருப்பு மாலை

வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவிப் பொடித் தூவியும் அவமதிப்பு செய்துள்ளது யார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவி பொடி தூவி
காவி பொடி தூவி

By

Published : Jan 9, 2022, 3:12 PM IST

கோயம்புத்தூர்: வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு, வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் மீது செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும், காவி நிற பொடித்தூவியபடியும் இருந்துள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரியார் படிப்பக நிர்வாகிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த நிர்வாகிகள் போத்தனூர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும் காவிப்பொடித் தூவியும் அவமதிப்பு

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். காவல் துறையினர் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இரவு நேரத்தில் அப்பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு திரண்டிருந்த திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகக் கூறி கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:கரோனா பரவல் அதிகரிப்பு, பிரதமர் இன்று ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details