தமிழகத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் நாடளுமன்றத்தில் பதவியேற்றபோது தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என முழங்கினர், இதற்கு தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் வாழ்க எனக்கூறியதால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, கங்கை நாடாளுமன்றத்தில் தெளிக்க நீரை அனுப்பிள்ளனர்.
நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு பெரியார் புத்தகங்கள் அனுப்பிவைப்பு; திமுக போராட்டம் - dmk protest
கோவை: நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க எனக்கூறி பதவியேற்ற திமுக உறுப்பினர்களால் புனிதம் கெட்டுவிட்டது என இந்து அமைப்பினர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சியில் திமுகவினர் பெரியாரின் புத்தகங்களை எம்பி-க்களுக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக போராட்டம்
இதைக் கண்டிக்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுகவினர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரியார் கொள்கை சார்ந்த புத்தகங்களையும், சபாநாயகருக்கு பெரியார் கைத்தடியையும் தபால் மூலம் அனுப்பினர். அதன்பின் பொள்ளாச்சி தலைமை அஞ்சலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் இந்து அமைப்பிரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.