கோவை:மாநகராட்சியில் இன்று (ஜூலை 13) சுமார் 8 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில் மாநகராட்சிக்குள்பட்ட ஐந்து மண்டலங்களில் 31 சிறப்பு முகாம்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்
ஒவ்வொரு மையத்துக்கும் தலா 250 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாமில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் பலரும் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருக்கின்றனர்.
கோவையில் தடுப்பூசிக்காக மழையில் காத்திருந்த மக்கள் பலர் குடை இல்லாமல் மழையில் நனைந்தபடி சாலையில் காத்திருக்கின்றனர். மேலும் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கோவை மாநகராட்சி ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மிரட்டும் டெல்டா- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!'