தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்...! - மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோவை: பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காத்திருப்பு போராட்டம்

By

Published : Sep 12, 2019, 5:30 PM IST

கோவையில் முத்தண்ணன் குளம், கணபதி, உக்கடம், இந்திராநகர் , வ.உ.சி நகர், காசிகவுண்டன் புதூர், குமாரசாமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் மூலம் புறநகர் பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றனர். ஆனால், குழந்தைகளின் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் பலர் இடம் பெயராமல் உள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு நகர் பகுதியிலேயே மாற்று இடம் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின முன்பு 100க்கும் மேற்பட்டோர் இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். புறநகர் பகுதியில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது எனவும், நகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

இதனிடையே, சம்பவ இடம் சென்ற கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொது மக்களின் கோரிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.நடராஜன் கூறியதாவது, நகர்ப் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் பொது மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை இந்த மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details