தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலைகளை சீர் செய்யக் கோரி, சார் ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்! - கோயம்புத்தூர் பொள்ளாச்சி

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகர்புறத்தில் உள்ள 36ஆவது வார்டில் சாலைகளை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

people petitioned sub collector in Pollachi
people petitioned sub collector in Pollachi

By

Published : Aug 24, 2020, 6:39 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகர்புறத்தில் உள்ள பொதுமக்கள் சார்பில் சாலை வசதி செய்தி தர கோரி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “பொள்ளாச்சி நகர்புறத்தில் உள்ள 36ஆவது வார்டு டீச்சர்ஸ் காலனி, வெங்கடாசலபுரம் , சோமசுந்தரபுரம், சபரி அருள் நகர், லட்சுமிபுரம் கிருஷ்ணா கார்டன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இந்த வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டன.

தற்போது பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் சூழ்நிலையில் கூட எங்கள் பகுதியில் சாலைகளை சரி செய்யவில்லை. சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

அவசர சிகிச்சை காலங்களில் எங்கள் வீடுகளில் இருந்து வாகனங்களை வெளியே எடுத்துச்செல்ல முடியவில்லை. பாதாள சாக்கடை பணியில் ஈடுபடுபவர்கள், வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர்.

அதை மக்களே சொந்த செலவில் சரி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் சரிவர தெரு விளக்குகளை பராமரிப்பதில்லை, பன்றித்தொல்லை அதிகமாக உள்ளதால் பெண்கள் சாலைகளில் நடமாட அச்சப்படுகின்றனர்.
எனவே இவை அனைத்தையும் சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details