கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் மட்டையில் இருந்து, காயர் பித்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில் கலக்கின்றன.
சாதாரணமாக நீரில் டி.டி.எஸ் அளவு 200 இருக்க வேண்டும். ஆனால் அப்பகுதி கிணற்றில் உள்ள நீரில் டி.டி.எஸ் அளவு 800க்கும் மேலாக உள்ளது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மாசு கலந்த நீரை பயன்படுத்தினால், கண் எரிச்சல், தொண்டை வலி, தோல் நோய் போன்றவை ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர்.