கோயம்புத்தூர்:கரோனா ஊரடங்கு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
அன்றிலிருந்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் அலுவலகத்திலுற்கு வெளியிலுள்ள மனுயளிக்கும் பெட்டியில் தான் மனுக்களைப் போட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.04) முதல் மீண்டும் முந்தைய நடைமுறை தொடங்கியுள்ளது. இதனையொட்டி இன்று நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள், பொதுமக்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை நேரில் சந்தித்து மனுக்களை அளித்தனர்.