கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்று காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வரும் ஞாயிறு (ஜனவரி 9) முதல் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரான் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,"பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் தற்போது உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மேலும் 250 படுக்கைகள் அதிகப்படுத்த உள்ளது.
தயார் நிலையில் 4,500 படுக்கைகள்
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டடத்தில், 'கோவிட் கேர் சென்டர்' தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 'கோவிட் கேர் சென்டர்' 4 ஆயிரத்து 300 படுக்கை வசதிகளும், கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதிகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 350 படுக்கைகளும், கொடிசியாவில் 700 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கல்லூரிகளில் 'கோவிட் கேர் சென்டர்' செயல்பட உள்ளது. மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக ஆக்ஸிஜன் 99 கிலோ லிட்டர் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திரவியம் முப்பத்தி ஒன்று உள்ளது.