கோவை:ஒமைக்ரான் தொற்று காரணமாக விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், டிசம்பர் 2ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அவருக்கு கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்தது. இருப்பினும், சுகாதாரத்துறை அலுவலர்கள் அவரை 7 நாள்கள் தனிமைபடுத்தி கண்காணித்து வந்தனர். இதையடுத்து அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.