கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் மறைந்த முன்னால் முதலமைச்சர் காமராஜ் கட்டிய அணைகளில் மிகவும் பிரபலமான அணை பரம்பிக்குளம் அணையாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணை உபரிநீர் சேடல் டேம் வழியாக சென்று தூணக்கடவு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வந்து சேருகிறது.
71 கன அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் உபரி நீர் வெளியேற்றம் செய்யும்பொழுது, நீரானது கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில், அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.