தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா நோயாளி ஒருவரை கவனிக்க 2,500 ரூபாய்: பிடிபட்ட சட்டவிரோத கட்டண உதவியாளர்கள் - கரோனா நோயாளிகளைக் கவனிக்க சட்டவிரோதமாக செயல்பட்ட கட்டண உதவியாளர்கள்

கோவை: இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கவனிக்க சட்ட விரோதமாக செயல்பட்ட கட்டண உதவியாளர்கள்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ESI Hospital
ESI Hospital

By

Published : Apr 20, 2021, 11:15 AM IST

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 680 படுக்கை வசதிகள் உள்ளன. நோய்த்தொற்றால் பாதிக்கபட்டவர்களை கவனித்துக் கொள்ள பலரும் தயக்கம் காட்டி வரும் நிலையில் இதனைப் பயன்படுத்தி கட்டண உதவியாளர்கள் என்ற பெயரில் சிலர் அம்மருத்துவமனை வளாகத்தில் செயல்படுவதாக புகார்கள் முன்னதாக எழுந்தன. இந்நிலையில் இது குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை சார்பில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரினைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மருத்துவமனை வளாகத்தில் கட்டண உதவியாளர்களாக செயல்பட்ட 17 பேரை வெளியேற்றினர். மேலும் பாலாஜி என்ற கட்டண உதவியாளரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நபரை கவனித்து கொள்ள நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 3,000 ரூபாய் வரை இவர்கள் கட்டணம் பெறுவது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், பாலாஜியிடம் கட்டண உதவியாளர்களை நியமித்து அனுப்பும் ஏஜென்ட் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details