கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், அலுவலங்கள், வணிக வளாகங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்கங்களும் எடுத்துவருகின்றன. இதனிடையே, கோயம்புத்தூர் மாநகர காவல் துறையினர், வெரைட்டிஹால் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தாத கடை, அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளனர்.