தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் மூலம் நடைபெற்ற காவலர்களின் பயிற்சி வகுப்பு! - Police Online Class

கோவை: தமிழ்நாடு காவலர்கள் பயிற்சி கல்லூரியில் கரோனா தொற்று, மன அழுத்தம் குறித்த ஒருநாள் ஆன்லைன் பயிற்சி திட்டம் நடைபெற்றது.

Online training class for police in Coimbatore
Online training class for police in Coimbatore

By

Published : Aug 6, 2020, 10:37 PM IST

தமிழ்நாடு காவலர்கள் பயிற்சி கல்லூரியில் கரோனா தொற்றை சமாளிக்க மன அழுத்தம் குறித்த ஒருநாள் ஆன்லைன் பயிற்சி திட்டம் நடைபெற்றது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை நகர காவல் துறையினருக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஆன்லைன் வகுப்பில் மேற்கு துணை பிரிவு சட்டம் மற்றும் ஒழுங்கு துறையினர், ஆயுத இருப்பு துறையினர், போக்குவரத்து துறையினர், குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வகுப்பு மூலம் மன அழுத்தத்துடன் தொடர்புடைய வேலையை எவ்வாறு நிர்வகிப்பது? தொற்றுநோயை தனிப்பட்ட முறையில் எவ்வாறு கையாளுவது? நோய்த் தொற்றை தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள், தொற்று காலத்தில் வாகன சோதனையை எவ்வாறு கையாளுவது? போன்றவற்றை காவலர்கள் தெரிந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details