தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காந்தி நினைவுநாள் உறுதிமொழி - தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் - நடந்தது என்ன? - கோவை சிவானந்தா காலனி பகுதி

கோவையில் இந்திய மாணவர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறுதிமொழி நிகழ்விற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்
மாணவர்

By

Published : Jan 30, 2022, 4:41 PM IST

கோவை: நாடு முழுவதும் ஜன.30ஆம் தேதியான இன்று, மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாட்டில் உள்ள முக்கியத் தலைவர்கள், பல்வேறு கட்சியினர் மற்றும் தனியார் அமைப்புகள் என்று அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவையிலுள்ள சிவானந்தா காலனி பகுதியில், மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி ஏற்பு

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டப் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் உறுதிமொழி ஏற்க, காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் காவல் துறையினருக்கும் குறிப்பிட்ட அந்த அமைப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

வாக்குவாதம்

மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் "இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட" என்ற வசனம் இடம் பெற்றிருந்தது.

அதனை காவல்துறையினர் அகற்றும் படி கூறினர்.

அதனைத் தொடர்ந்து 'இந்து' என்ற வார்த்தை மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எனினும், அந்த உறுதிமொழியில் "ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்" என்று தெரிவிக்கும்போது காவல்துறையினர் தடுத்தனர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உறுதிமொழி ஏற்பு நடத்தப்பட்டது

உறுதிமொழி ஏற்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், 'மதசார்பின்மையைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமலாக்குவதற்குச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு மற்றும் கேரள வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 72 ஆண்டுகளாக காந்தியடிகளின் பாடல்கள் இசைத்து வந்த நிலையில், இம்முறை அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை. நடந்ததை தான் கூறியுள்ளோம். காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே-வை சிலர் புகழ்வது வருத்தமளிக்கிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details