கரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வட மாநில மக்களை அவரவர் ஊருக்கு, அனுப்பி வைக்க அரசு திட்டமிட்டு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
கோவையில் உள்ள வட மாநில மக்கள், அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயிலிலும் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தனியாக டோக்கன்கள் வழங்கப்பட்டு, பேருந்து மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறு அழைத்து வரும் வட மாநில மக்கள், கூட்டம் கூட்டமாய் அழைத்து வரப் படுகின்றனர். ஒவ்வொரு பேருந்திலும் சமூக இடைவெளி இல்லாமல், அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு வரும் மக்கள் அனைவரும் ரயில் நிலையத்தில், உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.