கோயம்புத்தூர்: ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. நேற்று (ஜனவரி 6) முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட டாப்ஸ்லிப் (Topslip Tourism) பகுதிக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை கலை இயக்குனர் கணேசன் கூறுகையில், ”டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும்.
சுற்றுலா பயணிகளுக்குத் தடை சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: thiruvannamalai annamalaiyar temple: அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை - ரூ.71 கோடி வசூல்