கோயம்புத்தூர்:குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் சி.ஐ.டி அகாடமி எனப்படும் தகவல் தொழில் நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டில், இளைஞர்களின் தொடர் சொற்பொழிவு போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிற மொழியை கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம். என்னை பற்றியும், என் வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி அடையாளம், சுயமரியாதை சார்ந்தது. மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதலமைச்சர் அறிக்கை வெளியிடுள்ளார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. உலகத்தின் தொடர்பு கொள்ள ஆங்கிலம் மற்றும் நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து அண்ணா”ஒரு கதவு போதுமானது” என்று அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு.