தீபாவளி பண்டிகை நவ.4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ஒரு சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி பேரியம் கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பது, விற்பது, வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள், பட்டாசு வெடிக்கலாமா, கூடாதா என்னும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.