தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது! - தனியார் நிதி நிறுவனம்

போலி அமெரிக்க டாலர்களை கொடுத்து, இந்திய ரூபாய் பெற முயன்ற நைஜீரியா நாட்டைச் சேர்ந்த வியாபாரியை நேற்று (மார்ச்.1) காவல் துறையினர் கைது செய்தனர்.

nigerian-man-arrested-for-trying-to-convert-fake-us-dollar-into-indian-currency
போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது!

By

Published : Mar 2, 2021, 12:44 AM IST

கோவை : நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் நாதன் இக்சூகு. இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வருவதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், நேற்று கோவையை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அமெரிக்க டாலர் நோட்டுகளை கொடுத்து, இந்திய ரூபாயாக மாற்ற முயன்றுள்ளார்.

நாதன் இக்சூகுவிடமிருந்து அமெரிக்க டாலர்களை வாங்கிய நிதி நிறுவன ஊழியர் பாலச்சந்திரன் என்பவர் அவற்றை சோதனை செய்தபோது, அவை கலர் கட்டிங் பேப்பர் போலியானது என தெரியவந்தது.

இது குறித்து காட்டூர் காவல்துறையினருக்கு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்துவந்த ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர் நாதன் இக்சூகுவை பிடித்து விசாரித்தனர்.

அவரிடமிருந்த 1820 போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இக்சூகுவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது!

அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், நாதன் இக்சூகு கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஏற்றுமதியில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியா சென்ற அவர், அண்மையில் இந்தியா திரும்பியுள்ளார். நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் குஜராத் வந்தடைந்த அவர், அங்கே விமான நிலையத்தில் ஒருவரிடம் இந்த அமெரிக்க டாலர் வாங்கியதாகவும், இதை கோவை கொண்டுவந்து இந்திய ரூபாயாக மாற்றி பின்னர் அவர் திருப்பூர் செல்ல திட்டமிட்டிருந்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க :வாகன சோதனையில் 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details