கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் கே. சண்முகம் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் அக்டோபர் மாதத்திலிருந்து கரோனா தொற்று அதிகரித்து வந்தது. பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எனவே பாதிக்கப்பட்ட தெருக்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகம் இருந்த நிலையில் தற்போது 33 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே கோவையில் உள்ளன. தனிமைப்படுத்துதலை மீறுபவர்களை மருத்துவமனையில் கட்டாயமாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் மாநகர பகுதிகளில் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து வருகின்றன.