தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்எஸ்எஸ் கொள்கையின் சாயலா புதிய கல்வி அறிக்கை? - g ramakrishnan

கோவை: இந்தியாவில் கல்வியை ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்றார்போல் பாஜக அரசு வடிவமைக்கிறது என்று கேரள மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பேபி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Jul 27, 2019, 8:22 AM IST

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) அலுவலகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ள அம்சங்கள் கொண்ட பிரசுங்கள் வெளியிட்டப்பட்டது.


பின்னர் பேசிய பேபி, புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடம் எந்தவொரு கருத்து கேட்பு கூட்டமும் மத்திய அரசு நடத்தவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வியாளர்களுடன் அலோசனை செய்து ஒரு தெளிவான அறிக்கையைக் தயாரித்து, சிபிஎம் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ளார். இந்தியாவின் கல்வியைக் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்றார்போல் பாஜக வடிவமைக்கிறது என்றார்.

கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details