தமிழ்நாடு

tamil nadu

புதிய வழக்குகளை தாக்கல் செய்யலாம் - கோவை நீதிமன்றம்

By

Published : Jun 4, 2020, 6:40 AM IST

கோயம்புத்தூர்: மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை நீதிமன்றம்
கோவை நீதிமன்றம்



கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25-ஆம் தேதி முதல் கோவை நீதிமன்றம் மூடப்பட்டது. இந்நிலையில் இனி புதிய வழக்குகளை தாக்கல் செய்யலாம் என கோவை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய வழிமுறையாக தனித்தனியாக பெட்டிகள் வைக்கபட்டுள்ளன.

சார்பு நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், விபத்து இழப்பீடு முறையீடு நீதிமன்றம், என் தனித்தனியே பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் வழக்குகளை எழுதி போடலாம். ஆனால் மக்கள் யாரும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கபடமாட்டார்கள். நீதிமன்ற வாயிலில் அதற்காக இருப்பவரிடம் கொடுத்து விட்டால் அவரே அதை அந்த பெட்டிக்குள் போட்டுவிடுவார்.

இது தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details