பொள்ளாச்சியில் தனியார் அமைப்பு நடத்தும் 22ஆம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவு அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், தங்களின் அமைப்பு சார்பில் நடத்தும் 22ஆம் ஆண்டு கூடைப்பந்து போட்டி இதுவாகும். இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக வருவதே இதன் நோக்கம் என்று கூறினார்.
பயிற்சியாளர் மாறியவுடன் முதல் அவே போட்டியில் வெற்றிபெற்ற டோட்டன்ஹாம்!
மேலும், வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுவதாக தெரிவித்தவர், கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்
மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி