கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அதிகபட்ச அங்கீகாரமான A++ வழங்கியுள்ளது.
இது குறித்து காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் கூறுகையில், "காருண்யா நிகழ்நிலை பல்கலைக்கழகம் 36 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு 8000 மாணவ மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு, இந்தியா முழுவதும் இருந்து பேராசிரியர்கள் வந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து கொண்டுள்ளனர்.
கிரிமினாலஜி, தடயவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உயர்தர தங்கும் விடுதிகள் 700 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பாராட்டி A++ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான செயல் திட்டங்கள் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் உயர்தரமாக இருப்பதால் அதிகமான மதிப்பீடு கொடுத்துள்ளார்கள்.