தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனிதன் வாழக்கூடிய பூமியை, நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் - முன்னாள் நாசா வீரர் - நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்குபெற்ற நிகழ்ச்சி

கோவை: அடுத்த ஐந்தாண்டுகளில் நாசாவால் நிலவில் மேற்கொள்ள இருக்கும் முயற்சிக்கு இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று  நாசா முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்குபெற்ற நிகழ்ச்சி

By

Published : Aug 31, 2019, 4:51 AM IST

பார்க் கல்விக் குழுமம் நடத்திய விண்வெளி குறித்த கருத்தரங்கத்தில் நாசா முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “நிலவின் முக்கியப் பகுதியான தென் துருவப் பகுதியில், முதல் முறையாகத் தரையிறங்கவுள்ள சந்திராயன் 2 திட்டம் நிலவு குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளவும், எதிர்கால ஆராய்ச்சிக்கும் ஆதரவாக இருக்கும் என்பதால் இந்தியா பெருமை அடைய வேண்டிய தருணம்” என்றார்.

மேலும் விண்வெளி தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் தென்னிந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், நாசாவின் அடுத்தடுத்து திட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கிறது. நிலவில் மனிதர்கள் தங்குவது கடினமானது என்றும், பகல் நேரத்தில் 100டிகிரி வரையில் இருக்கும் வெப்பம், இரவில் 100 டிகிரியாக இருப்பதுடன், கதிர்வீச்சு அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் இருப்பதாக அதற்கான காரணங்களை விளக்கினார். நிலவில் ஒரு முகாம் அமைத்து ஆராய்ச்சி மேற்கொள்வது சிறப்பான, சுவாரசியமானது என்றாலும், வாழ்வது கடினமானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஸ்பேஸ் லாஞ் சிஸ்டம்’ என்ற மிகப்பெரிய ஏவுகணையை நாசா உருவாக்கி வருவதாகவும், இன்னும் 3 வருடத்தில் நிலவைச் சுற்றி வரவும், 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவும் அதன் மூலம் திட்டமிட்டுள்ளதுடன், அந்த நிலவின் பயணத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் இருவர் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவித்தார். அதில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்குபெற்ற நிகழ்ச்சி

விண்வெளியில் பழைய ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் ஆகியவை குப்பைகளாக இருப்பதை 'ஜுங்க்ஸ்' என விண்வெளி மொழியில் குறிப்பிடுவதாகவும், ஒரு ஏவுகணை வெடித்தால் 1000 துண்டுகளாக விண்வெளியில் சிதறி மிதந்து கொண்டிருக்கும் என்றும், ஒரு சிறிய எடுத்துக்காட்டாக விண்வெளி தொடர்பான குப்பைக்கு உதாரணம் கூறியவர், சர்வதேச நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் விண்வெளியில் ஏற்படும் குப்பைகளைக் குறைக்க வழிவகுக்கும் என்றார்.

மனிதன் வாழக்கூடிய ஒரே இடம் பூமி என்பதால், அனைத்து நாடுகளுக்கும் பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளதாக வலியுறுத்தியவர், அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், அது வெற்றியைத் தரும் என்பதை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உணர்த்துவதாகவும், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா எந்த நாட்டுடனும் பணியாற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details