கோயம்புத்தூர்: துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி(58).
இவருக்கு சுகன்யா(30) என்ற மாற்றுத்திறனாளி மகளும், சசிக்குமார் என்ற மகனும் உள்ளனர். சசிக்குமார் திருமணமாகி சரவணம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(ஜன.4) சசிக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனலட்சுமி, 'நான் ஜோதிடம் பார்த்தேன், அதில் எனக்கு கை, கால் இல்லாமல் போய்விடும் எனக் கூறினார்கள். நானும் சுகன்யாவும் இருப்பது உனக்கு பிரச்னை ஏற்படுத்தும். எனக்கும் ஜோதிடத்தில் சொன்னது போல் நடந்து விட்டால் எங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அதனால், தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெல்லாம் நடக்காது எனக் கூறிய சசிக்குமார், நேற்று(ஜன.5) தனலட்சுமியைப் பார்க்க செல்லலாம் என எண்ணி வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது அம்மா செல்போனை எடுக்கவில்லை.
பின்னர் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா? எனப் பார்க்கும்படி கூறியுள்ளார்.