தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுடன், சிசிடிவி பதிவையும் கொள்ளையடித்த திருடர்களால் பரபரப்பு! - rs 10 lakh worth things theft

கோவை: தொழிலதிபர் வீட்டில் பத்து லட்சம் ருபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் சேர்ந்து சிசிடிவி பதிவுகளும் கொள்ளையடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை

By

Published : Sep 24, 2019, 7:24 PM IST

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குப்தா. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், தனது மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை சாய்பாபா காலணி பகுதியில் வசித்து வருகிறார்.

இவரும் இவரது மனைவியும் கடந்த 16ம் தேதி தம் சொந்த ஊரான குஜராத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது இரு குழந்தைகள், பணியாட்கள் உட்பட எட்டு பேர் மட்டுமே இருந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி அவரது வீட்டின் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் அலாரம் சப்தம் கேட்டது. ஆனால் எதுவும் திருடப்படவில்லை என அக்கம்பக்கத்தினர் ஆதித்யா குப்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீடு திரும்பிய ஆதித்யா குப்தா தனது வீட்டில் சோதனையிட்டபோது பீரோவிலிருந்த வைர மோதிரம், தங்க செயின், 2.5 லட்சம் ருபாய் ரொக்கம், வெளிநாடு பணம் 1000 என பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து சாய்பாபா காலணி காவல் நிலையத்திற்கு அவர் தகவலளித்ததின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவான டி.வி.ஆர் ஐயும் திருடர்கள் எடுத்துச் சென்றதால் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பீரோ உடைக்கப்படமால் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலிருந்த எட்டு பணியாளர்களையும் காவல் துறையினர் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details