தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஸ் கோர்ஸில் நடைப்பயிற்சி: கோவையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த கமல்! - சட்டப்பேரவைத் தேர்தல்

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்ட கமல்!
கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்ட கமல்!

By

Published : Mar 16, 2021, 1:57 PM IST

Updated : Mar 16, 2021, 2:05 PM IST

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், அக்கட்சி முதலமைச்சர் வேட்பாளருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து நேற்று (மார்ச்.15) கோவை வந்த அவர், கோவை மாநகராட்சி, மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மாலை தேர் நிலைத் திடல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த கமல்ஹாசன்

இந்நிலையில் இன்று (மார்ச். 16) காலை அவர் போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பார்வையிட்ட அவர், அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சென்று, அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில மக்கள் அப்பகுதியில் உள்ள குறைகளை கமல்ஹாசனிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

Last Updated : Mar 16, 2021, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details